Saturday, 19 March 2022

இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு மூலம் நடத்தப்பட்ட கிராமப்புற இரத்த தான முகாம் நல்ல பங்கேற்பைப் பெற்றது

 


இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு

மூலம் நடத்தப்பட்ட

கிராமப்புற இரத்த தான முகாம் நல்ல பங்கேற்பைப் பெற்றது

 இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு - நிர்வாக சீர்திருத்தங்கள், சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துதல், கல்வியாளர்கள் மற்றும் சேவை ஆகியவற்றில் முன்னணியில் உள்ள நன்கு அறியப்பட்ட அமைப்பாகும்.

இந்த அமைப்பு உலகளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு நிறுவனமான அடையார் புற்றுநோய் நிறுவனத்துடன் இணைந்து 'இரத்த தான முகாமை' 19 மார்ச் 2022 அன்று சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராமத்தில் நடத்தியது.இந்த முகாம் உள்ளூர் மக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றது மற்றும் 150க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

ஒருவரின் உயிரைக் காப்பதற்கு உதவும் வகையில் அளிக்கப்படும் ரத்த தானம் பன்மடங்கு பெருமைக்குரியது. ஆகும்.பசியைப் போக்கும் அன்னதானத்தை, மிகச் சிறந்த தானமாக நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் அதை விடவும், ஒருவரின் உயிரைக் காப்பதற்கு உதவும் வகையில் அளிக்கப்படும் ரத்த தானம் பன்மடங்கு பெருமைக்குரியது ஆகும்.

நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் வாயுவை, நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதோடு, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது ரத்தம். ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய திரவம். ரத்தம் என்னும் அதிசய திரவத்தை, நாம் இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை.

 

ஒருவருக்கு ரத்தம் எப்போது தேவைப்படும் என்பதை திட்டமிட்டுக் கூற முடியாது. ஒரு சிலருக்கு விபத்தினால் ஏற்பட்ட ரத்த வெளியேற்றத்தின் காரணமாக தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு போர்க் காயங்களினால், அறுவை சிகிச்சையின் போது, ரத்த மாற்றம் செய்யும் வேளையில் இப்படி பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவருக்கும் ரத்தம் தேவைப்படும். அதுபோன்ற அவசர கால நேரங்களில் அலைந்து திரிய முடியாது என்பதால்தான், ரத்த தானம் செய்ய முன்வருவோர்களிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, அவை ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் / இரத்த வங்கிகளிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.

கிராம அளவில் இரத்த தானம் குறித்த உயர் மட்ட விழிப்புணர்வை வெற்றிகரமாக ஏற்படுத்தியதன் பிரதிபலிப்பாகும் என்று இந்த அமைப்பின்  தலைவர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு மகாலிங்கம் அவர்கள்  கூறினார்.

 

A MAHALINGAM /  மகாலிங்கம்

EDUCATIONALIST & MEDICAL SOCIAL ACTIVIST

PRESIDENT

ASSOCIATION FOR HEALTHCARE MANAGEMENT

PROFESSIONALS - INDIA(AHMP)  - (REGD.)

website : http://www.ahmpindia.in/


No comments:

Post a Comment