மூத்த குடிமக்கள் மற்றும் பெரியவர்களை நாடி வீடு தேடி வரும் (இலவச) விரிவான கண் பரிசோதனைகள் - ட்வின்டெக் ஹெல்த்கேர்
சர்வீசஸ், சென்னை.
82 வயதான ராமசாமி, தனது மங்கலான கண்பார்வைக்குப்
பழக கற்றுக்கொண்டார். ஏனென்றால். கண் மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும்
அவர் பலவித துயரங்களைசந்திக்க நேரிடும். முதலில் துணைக்கு உதவ ஒரு ஆளை ஏற்பாடு
செய்ய வேண்டும்., கூட்ட
நெரிசலான போக்குவரத்தைப்பொறுத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல வேண்டும். அங்கு கண் அழுத்தப்
பரிசோதனை, விழித்திரை
மதிப்பீடு, கண்புரை
பரிசோதனை-ஏன் ஒரு சாதாரண கண்ணாடி மாற்றத்திற்காகக் கூட பல மணிநேரம் காத்திருக்க
வேண்டும்.
வீடு திரும்பும் போது உடல் சோர்ந்துவிடும்—மீண்டும் இந்த முயற்சியைச் செய்ய வேண்டுமா என்ற தயக்கம் அவரிடம் அடிக்கடி
இருக்கும். பல முதியவர்களைப் போலவே, அவரும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கவனிப்பைத் தள்ளிப்போட்டார்; அது அவசியமற்றது என்பதால் அல்ல, அது மிகவும் சிரமமாக
இருந்ததால்.
விழி ஒளிப் பரிசோதகர் (ஆப்டோமெட்ரிஸ்ட்) ஒருவரின்
விரிவான கண் பரிசோதனை இறுதியாக அவர் வீட்டு வாசலுக்கே வந்தபோதுதான்அந்த மாற்றத்தை
உணர்ந்தார்.கண்நீர்அழுத்தமும்விழித்திரையும்பரிசோதிக்கப்பட்டது. கண்புரை நிலை மதிப்பீடு
செய்யப்பட்டது மற்றும் அவரது கண்ணாடிகள் புதுப்பிக்கப்பட்டன—அனைத்தும் அவரது வீட்டின் வரவேற்பறையிலேயே
நடந்தன. அடுத்த நாள் காலையில் அவரால்செய்தித்தாளை வாசிக்க முடிந்தது. இதைத்தான் அவர் பல நாட்களாக
எதிர்பார்த்தார். இந்தியாவில் முதியவர்களுக்கான விருப்பமான இத்தகைய தருணங்கள்கண்சிகிச்சையின்தேவையினைபடம்பிடித்துக்காட்டுகின்றன.
26 ஆண்டுகள் கண் பரிசோதனை
பயிற்சியில் நிறுவன அனுபவமும், நிபுணத்துவமும்
பெற்ற ஒரு
விழி ஒளிப் பரிசோதகர் (ஆப்டோமெட்ரிஸ்ட்) தனது வயதான
பெற்றோரைகவனித்துக்கொள்வதற்காகத் தனது வழக்கமான தொழில்
வாழ்க்கையிலிருந்துவிலகினார்.வயதானவர்களுக்கானகண் சிகிச்சைவசதிகளை எவ்வாறு
எளிமையாகத் தருவது என்ற சிந்தனைக்கு 2020ல் வடிவம் கொடுத்தார்.
வயதானவர்கள் ஆர்வத்துடன் வீட்டிலேயே கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
நாளடைவில் சிகிச்சை பெற்றவர்களே அதன் வலுவான ஆதரவாளர்களாக—'பார்வை தூதுவர்களாக'—மாறினர். மருத்துவமனைக்குச் செல்லும்
சிரமம் இல்லாமல் மற்றவர்களையும் கண் பரிசோதனை செய்ய ஊக்குவித்தனர்.
இந்த அனுபவம் ஒரு நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்தியது. இந்தியாவில்
உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனைகள் இருந்தாலும், அந்த வசதிகள்'கிடைப்பது' (Availability) சவாலல்ல, அதைச்'சென்றடைவது' (Access) தான் உண்மையான சவால்.
முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், மருத்துவமனைக்கு சென்று சோதித்துக்கொள்வது என்பது கொஞ்சம் கடினம்தான்.இதில்
கடினமான பயணம், நீண்ட
காத்திருப்பு நேரங்கள், அணுக முடியாத
கழிப்பறைகள், வீட்டிற்கு
வெளியே உணவு மற்றும் இதற்கான செலவுகள் அனைத்தும்உள்ளடங்கி இருக்கிறது. இந்தத்தடைகள்தான்சரியான
நேரத்தில் கண் சிகிச்சை பெறுவதைத்தடுக்கின்றன அல்லது தாமதப்படுத்துகின்றன.
முதுமையடைந்து வரும் இந்தியா, அதிகரித்து வரும் பார்வைச் சுமை
இந்தியா வேகமாக முதுமையடைந்து வருகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தற்போது மக்கள் தொகையில் சுமார் 12% ஆக உள்ளனர். இது வரும் காலங்களில்
கிட்டத்தட்ட 22% ஆக உயரும்
என்று கணிக்கப்பட்டுள்ளது. வயதாகவயதாக, கண்புரை, சரிசெய்யப்படாதபார்வைகுறைபாடுகள், குளுக்கோமா (கண் அழுத்த நோய்), நீரிழிவு கண் நோய் மற்றும் வயது
தொடர்பான விழித்திரை சிதைவு போன்றபார்வை குறைபாடுகள்கணிசமாக அதிகரிக்கின்றன.
வயதானவர்களுக்கு, தீர்வு
சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இல்லை. பல சமயங்களில்
வழக்கமான கண் பரிசோதனைகள், ஆரம்பகால
கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் கண்ணாடி அணிதல் போன்றவைகளேபோதுமானது.
வயதானவர்கள்என்பதாலேயே இந்த சாதாரண சேவைகள்பலருக்குஎட்டாக்கனியாகவே இருக்கின்றன..
தொழில்நுட்பம் கண் சிகிச்சையை வீட்டிற்கே கொண்டு செல்கிறது
கையடக்கமான, தொழில்நுட்ப
வசதி கொண்ட கண் சிகிச்சை உபகரணங்களின் முன்னேற்றம், மருத்துவமனைச்சுவர்களுக்குவெளியேயும் இவற்றை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
கண்ணாடி பரிசோதனை, கண்நீர் அழுத்த அளவீடு மற்றும்
கண்ணின் முன் மற்றும் பின் பகுதியின் விரிவான பரிசோதனை ஆகியவற்றை இப்போது
நோயாளியின் வீட்டிலேயே நம்பகத்தன்மையுடன் செய்ய முடியும்.
இதன் நன்மைகள்வசதியையும்தாண்டியவை. தெரிந்த சூழலில் வழங்கப்படும் கவனிப்பு
மன அழுத்தத்தைக் குறைக்கிறது, அதிக
அனுதாபத்துடன்கூடியது மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் அறிவுசார்சவால்களைஎதிர்கொள்பவர்களால்சிறப்பாக
ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 'வீடு தேடி
வரும் கண் சிகிச்சை' அணுகுமுறைமூலம்மருத்துவமனைக்கானபயணத்தைத்தவிர்க்கிறது.
இல்லம் தேடி வரும் சிகிச்சையில் விழி ஒளிப் பரிசோதகர் (ஆப்டோமெட்ரிஸ்ட் பங்கு
இந்த மாதிரியின்மையமாக கண் பரிசோதகர் இருக்கிறார்—அவரே முதன்மை கண் சிகிச்சை வழங்குநர்
மற்றும் கண் சுகாதார அமைப்பின் முதல் தொடர்பு புள்ளி. பார்வையைமதிப்பிடுவதற்கும், ஆரம்பகால கண்
நோயைக்கண்டறிவதற்கும், தொடர்
சிகிச்சையைமேற்கொள்வதற்கும்,பார்வைகுறைபாடு
சோதனை மற்றும் இருகண் பார்வை கோளாறுகளைநிர்வகிப்பதற்கும், குறைபார்வைசிகிச்சையை (Low vision care) வழங்குவதற்கும்
பயிற்சி பெற்ற கண் பரிசோதகர்கள், சமூக அளவில்
விரிவான கண் சிகிச்சையை வழங்க தனித்துவமானதகுதியைப்பெற்றுள்ளனர்.
கண் பரிசோதனை சிகிச்சை என்பது இயல்பாகவே தடுப்பு முறை சார்ந்ததும், நடமாடும் தன்மை கொண்டதும், மக்களைமையமாகக்கொண்டதுமாகும்.
கையடக்ககண்டறியும் கருவிகள் மூலம், ஒரு கண்
பரிசோதகரால்பெருமளவிலான கண் சிகிச்சை தேவைகளை வீட்டிலேயே
பாதுகாப்பாகவும்திறமையாகவும் கையாள முடியும். வீடு தேடி வரும் திட்டங்களின்
அனுபவம், பரிசோதிக்கப்பட்டவர்களில்
கிட்டத்தட்ட 60-70% பேரை முதன்மை
சிகிச்சை நிலையிலேயேமுழுமையாகக் கையாள முடியும் என்பதைக் காட்டுகிறது. இது தேவையற்ற மருத்துவமனை
வருகைகளைக்கணிசமாகக் குறைக்கிறது.
சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக மாதிரி
இந்தத்தேவையை உணர்ந்து, சென்னையின் ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் ( TwinTech Healthcare
Services) உண்மையிலேயே பின்தங்கியவர்களுக்காக
ஒரு கட்டமைக்கப்பட்ட'வீடு தேடி
வரும் கண் சிகிச்சை' த்திட்டத்தைத்
தொடங்கியது. இந்த முயற்சியின் கீழ், முதியவர்கள் மற்றும் பிற நலிந்தபிரிவினருக்கு கண் சிகிச்சை சேவைகள் இலவசமாக
வழங்கப்படுகின்றன.
இதுபோன்றசோதனைகளை திறம்பட செய்ய முடியும் என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கண் சிகிச்சை வழங்குநர் தனது தொழில்முறை சேவைகளைத்தன்னார்வமாகவழங்குகிறார். அகாடமி,பணிகளைஒருங்கிணைத்து, பயனாளிகளுடன் சேவை
வழங்குநர்களைஇணைக்கிறது. பயனாளிகளேவிழிப்புணர்வைப்பரப்புவது, தேவையுள்ளவர்களை அடையாளம்
காண்பது மற்றும் கண்ணாடிகளுக்குஆதரவளிப்பது போன்ற செயல்கள் மூலம் பங்களிப்பு
செய்கிறார்கள்.
இதன் தாக்கம் உண்மையானது. கடந்த மூன்று ஆண்டுகளில் 4,012 பேரும், 2025-ஆம் ஆண்டில் மட்டும், இந்த முயற்சியால்1,339 பேர் பயனடைந்துள்ளார்கள். இதில்
சுமார் 33% முதியவர்கள், 12% வேத பாடசாலை மாணவர்கள், 12% காப்பகங்களில் உள்ள மனநலம்
பாதிக்கப்பட்ட பெரியவர்கள், மற்றவர்கள்
அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள். இதுவரையில் 421 நபர்கள் இலவசமாக
கண்ணாடிகளைப்பெற்றுள்ளனர்.இதன் மூலம் பார்வை மீண்டும் கிடைத்து,அவர்களால் சுதந்திரமாகச்
செயல்பட முடிந்தது.
வழக்கமான சிகிச்சைக்கு அப்பாற்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள், இல்லத்திலேயேகுறைபார்வை
(Low vision) சேவைகளையும், பொருத்தமான
கருவிகளையும்பெற்றனர். சரி செய்ய முடியாத பார்வை இழப்பு உள்ளவர்களுக்கு, இது வாசிப்பதற்கும், சுதந்திரமாக நடப்பதற்கும், அன்றாடச்செயல்பாடுகளைக்கவனிப்பதற்கும்
உதவியது—இது அவர்களின்
வாழ்க்கைத்தரத்தில்அர்த்தமுள்ளமுன்னேற்றத்திற்கும்வழிவகுத்தது.
புத்தாக்கத்திலிருந்து தேசிய நடைமுறை வரை
வீடு தேடி வரும் கண் சிகிச்சை என்பது இப்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட
சோதனை முயற்சி அல்ல. சங்கரநேத்ராலயா (சென்னை) மற்றும் எல்.வி.பிரசாத் கண் நிறுவனம்
(ஹைதராபாத்) போன்ற நிறுவனங்களும், லென்ஸ்கார்ட்
(Lenskart) மற்றும் லாரன்ஸ்&மேயோ (Lawrence & Mayo) போன்ற
ஆப்டிகல் நிறுவனங்களும் தங்கள் சேவைகளில் இல்லம் சார்ந்த கண் பரிசோதனையை ஒருங்கிணைத்துள்ளன.
கண் மருத்துவமனைகள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
மீது கவனம் செலுத்துகின்றன. அத்துடன்
மேம்பட்ட சிகிச்சைக்காகத்தொலைமருத்துவவசதிகளையும்(Teleconsultation)பரிந்துரை வழிகளையும்உள்ளடக்கியுள்ளன. வீட்டிலேயே
பரிசோதிக்கப்பட்டவர்களில்பெரும்பாலோருக்கு மேல் சிகிச்சை பரிந்துரை
தேவைப்படுவதில்லை என்பது, இல்லத்திலேயே
வழங்கப்படும் முதன்மை கண் சிகிச்சையின்மதிப்பைஉறுதிப்படுத்துகிறது.
ஒரு பொதுச் சுகாதார அவசியம்
இந்தியாவின் முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கும்போது, வயது தொடர்பான கண்
நோய்களின்சுமையும்அதிகரிக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள முதன்மை கண்
சிகிச்சையைவலுப்படுத்துவது அவசியம், இதில் விழி ஒளிப் பரிசோதகர்கள் (ஆப்டோமெட்ரிஸ்ட்) மருத்துவமனை சுவர்களுக்கு
வெளியே முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
வீடு தேடி வரும் கண் சிகிச்சை என்பது இனி ஒரு தொண்டு சார்ந்த கூடுதல்
சேவையோ அல்லது ஒரு சிறிய திட்டமோ அல்ல. இது ஒரு பொதுச் சுகாதாரத்தேவையாகும்.
யாருக்கு பார்வை சிகிச்சை தேவையோ, அவர்களின்
வீடுகளுக்கே அதை எடுத்துச் செல்வதன் மூலம், எட்ட முடியாதவர்களையும் சென்றடைதல் என்ற இலக்கை நோக்கி இந்தியா
நெருங்குகிறது.
மீண்டும் தெளிவான பார்வை பெற்றவரின் மெல்லிய புன்னகையில் ஒரு சக்திவாய்ந்த
உண்மை இருக்கிறது: அணுகக்கூடிய கண் சிகிச்சை என்பது மருத்துவமனைகளில் அல்ல, வீடுகளிலும்சமூகங்களிலும்தொடங்குகிறது—ஒவ்வொருவீட்டு வாசலிலும்.
இப்படிக்கு,
கட்டுரையாளர்கள்
(வீடு தேடி வரும் இலவச முதியோர்
விரிவான கண் சிகிச்சை சேவைகள்)
டாக்டர். ர.கிருஷ்ணகுமார்
(வாட்ஸ்அப் :98403 12791)
மூத்த மற்றும் ஃப்ரீலான்ஸ் ஆப்டோமெட்ரிஸ்ட், சென்னை.
டாக்டர் அ.மகாலிங்கம்
வாட்ஸ்அப் :9710485295).
ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ், சென்னை.
No comments:
Post a Comment