வாட்சப்குழு அமைத்து கருவுற்ற தாய்மார்களை அரவணைக்கும் ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராம
சுகாதார
செவிலியர் திருமதி
எஸ். ஜெயலட்சுமி அவர்களின் தாய் சேய் நலப்பணி போற்றத்தக்கது.
கிராம சுகாதார செவிலியர்கள் தான் அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார
நிலையங்களுக்கும் கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் இடையே ஒரு பாலமாக பணியாற்றுகின்றனர்.
ஒரு கிராமப் பெண் கருவுற்றதிலிருந்து, பிரசவம் வரை, பிறகு தாய் - குழந்தையைப் பராமரிப்பது, நோய்த்தடுப்பு அட்டவணையின்படி
பல்வேறு தடுப்பூசிகளை போடுவதும் இந்த கிராம தேவதைகள் தான். அவர்கள் கொரோனா தடுப்பூசி
தடுப்பு திட்டத்தின் முதுகெலும்பாக இருந்தார்கள் / இருக்கிறார்கள்.
----------------------------
சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. கடந்த 2 ஆண்டுகளாக வாட்ஸ் அப் குழு மூலம் திருமதி எஸ். ஜெயலட்சுமி, சென்னை, வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆவடியை அடுத்த வெள்ளானுர் கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) தன் பகுதி கருவுற்ற தாய்மார்களுக்கு நலக்கல்வியையும் விழிப்புணர்வினையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறார். இதன் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணமும் செய்து மக்களின் பாரட்டினை பெற்று வருகிறார்.
இந்தக் குழுவின் மூலம் தன் பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வாட்ஸ்அப் எண்களைச் சேகரித்து, கோவிட் தடுப்பூசி போடும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்ற தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் செய்தார்.
சுகாதார சம்மத பட்ட பல்வேறு வீடியோக்கள், ஊட்டச்சத்து செய்திகள், இயல்பான பிரசவத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் யோகா பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், RCHID அட்டை மற்றும் அதன் முக்கியத்துவம் போன்றவற்றை தனது சொந்த வீடியோ வெளியிட்டு நோயாளிகள் மற்றும், கர்ப்பிணி தாய்மார்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை உண்டாக்கி ஊக்கப்படுத்திவருகிறார்
இப்போது COVID தொற்றுநோய் முடிந்துவிட்டது, மேலும் அவர் இந்த தகவல் தொழில்நுட்பத்தை தனது பகுதி நோயாளிகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.இதன் மூலம் கிராமபுற கர்ப்பிணி தாய்மார்களும் / நோயாளிகள் சமீபத்திய தகவல் தொழில்நுட்பமான வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டனர்
நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் இந்த செவிலியர் எடுத்துகொள்ளும் தனிக்கவனத்தினை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூக சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவருடைய சிற்ப்பான பணிகள் ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டி விருதும் பெற்றுள்ளார், அவர் பகுதி பொதுமக்கள் அவரை செவிலியர் அம்மா, சகோதரி, ஜெயா அக்கா என அன்புடன் அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment