Thursday, 29 October 2020

நெறிசார்ந்த மருத்துவ அணுகுமுறையின் தேவை குறித்த அன்பான வேண்டுகோள் -சென்னை புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் (திருமதி) வி சாந்தா

 

சென்னை புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் (திருமதி)  வி சாந்தா அவர்களின்  கருத்து

 

நெறிசார்ந்த மருத்துவ அணுகுமுறையின் தேவை குறித்த அன்பான வேண்டுகோள்

 

சமுதாயத்தின் அனைத்து தரப்பினைரையும் சென்றடையும் வகையில் மருத்துவ சேவையின் தரத்தினை உயர்த்தவேண்டி இருக்கிறது. இதற்காக முழுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டியது தற்போது மிகவும் தேவையான ஒன்றாகும். இந்த பொறுப்பு மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள், உயர்தர சிறப்பு நிபுணர்களை மட்டும் சார்ந்தது கிடையாது. மருத்துவம் சாரா பணியாளர்களான செவிலியர்கள், பல்துறை சார்ந்த நுட்பணர்கள், உயிர் மருத்துவ பொறியாளர்கள் போன்ற அலுவலர்களுக்கும் இதில் பங்கு உள்ளது.

மனிதாபமான சேவை, மனித வாழ்க்கைக்கு மதிப்பளிப்பது, மேற்கொண்டு தீங்கு விளைக்காதது போன்ற அடிப்படை பண்புகளை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

கால வளர்ச்சிக்கேற்ற தொழிற்நுட்பம் மற்றும் மேம்பட்ட மருத்துவ அறிவினால் கண்டுபிடிக்கப்படும் கருவிகளை மருத்துவர்களும் மருத்துவ வல்லுநர்களும் பயன்படுத்தும்போது புதிய நவீன தொழிற்நுட்பம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அதனை பயன்படுத்தக்கூடாது. அதன் நன்மை தீமைகள், நோயாளிக்கு ஏற்படும் செலவு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் முக்கிய கடமையாகும்.

நெறி சார்ந்த மருத்துவ முறையினை இளம் மருத்துவர்கள் பின்பற்ற வேண்டியதன் தற்போதைய அவசியத்தை உணர்ந்து இளம் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிலேயே அவற்றினை கற்றுத்தர வேண்டும்.

சமூகத்துக்கு பயன்தராத அறிவியலை ஒருபோதும் யாரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என்று காந்தி மகான் சொல்கிறார்.

நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதோடு மருத்துவரின் கடமை முடிந்துவிடவில்லை. நோயாளியின் சுகாதாரத்தை மேம்படுத்தி  அவரின் வாழ்நாளை  நீட்டிப்பதிலும் அவருக்கு பொறுப்பு இருக்கிறது.

வயதாவதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள், வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவுகள் போன்றவற்றை தடுக்கக்கூடிய காலகட்டத்தில் தற்போது இருக்கிறோம். ஆசிரியராக,  ஆலோசனை வழங்குபவராக, எல்லாவற்றும் மேலாக நோயாளியின் உடல்நலத்தை மேம்படுத்துவராக ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment