ரத்த வங்கிகள் மற்றும் அதை சார்ந்த சேவைகளை மேம்படுத்த சென்னையில் ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி என்ற அதிசிறப்பு மையம் அமைக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார்.
முதல்வர் தன் உரையில் கூறியதாவது:
''தமிழகத்தில் 2010ல் ஆயிரம் குழந்தைகளுக்கு 24 என இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் தற்போது 21 ஆக குறைந்துள்ளது. 2010ல் 27 ஆக இருந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 23 ஆக குறைந்துள்ளது. தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 79 ஆக இருந்தது. தற்போது 67 ஆக குறைந்துள்ளது. சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவியில், தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவ கட்டமைப்புத் திட்டம் ரூ. ஆயிரத்து 634 கோடியில், இந்தாண்டு முதல் 17 நகரங்களில் 21 அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் 288 ரத்த வங்கிகள், 434 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. ரத்த வங்கிகள் மற்றும் அதை சார்ந்த சேவைகளை மேம்படுத்த சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி என்ற ஒப்புயர்வு மையத்தை ரூ.202 கோடி மதிப்பில் நிறுவ தமிழக அரசு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மையம் நாட்டில் டெல்லி மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே அமைய உள்ளது'' என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:
Post a Comment