கொள்ளுமேடு - அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வெள்ளனூர் பஞ்சாயத்து , ஆவடி ,சென்னை -
600 062
திருவள்ளூர் மாவட்டம்
டெங்கு காய்ச்சல் - விழிப்புணர்வு
முகாம்
டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி அருகில் உள்ள கொல்லுமேடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
நவம்பர் 20 அன்று நடைபெற்றது.
கொசுக்கள் பெருகும்
விதம் மற்றும் அதன் மூலம் நோய்கள் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.லாவண்யா பொதுமக்களுக்கும்
மாணவர்களுக்கும் விளக்கிக் கூறினார்.
வீட்டிலும்
வெளியிலும் மேற்கொள்ள வேண்டிய டெங்கு தடுப்பு முறைகள் குறித்தும் வீட்டையும்
சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும்
விளக்கிக் கூறப்பட்டது. ஒரு நாளுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால்
மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் மருத்துவர் எடுத்துரைத்தார்.
கொசு
உற்பத்தியாகக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்து டெங்கு தடுப்பு பணிகள்
ஆற்றி வரும் மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்புத் தந்து டெங்குவினை ஒழிக்க
அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில்
பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
இக்கூட்டத்தினை டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் திரு. அ மகாலிங்கம்
ஒருங்கிணைத்தார்.
வட்டார மருத்துவ அதிகாரி
கொள்ளுமேடு - அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
திருவள்ளூர் மாவட்டம்